16 February 2007

1 : கணனி உலகிற்கு வருக

ஏற்கனவே ஒரு வலைப்பதிவு இருக்கும் போது எதற்குப் புதிதாக இந்த வலைப்பதிவு என்ற கேள்வி எழுவது நியாயமே. அதற்கான பதில்களைத் தருவதுடன் இந்த வலைப்பதிவின் வாசம் தொடங்குகின்றது.

என்னிடம் ஏற்கனவே இருக்கும் வலைப்பதிவில் நான் பலதரப்பட்ட கட்டுரைகளை எழுதுகின்றேன். சிறுகதை நகைச்சுவைகள் என்று அந்தப்பட்டியல் நீள்கின்றது. அந்த கலகலப்பினுள்ளே கணனிக் கட்டுரைகள் அடிபட்டுப் போய்விடுவதாகவே நான் உணருகின்றேன். ஆகவே கணனிக் கட்டுரைகளுக்கென்று இந்த புதிய வலைத்தளத்தை ஆரம்பித்துள்ளேன். இந்த நீண்டநாள் கனவு இன்றே நிறைவேறுகின்றது.

எனது பிரதான வலைப்பதிவான தமிழ் வலைப்பதிவில் இருந்து கணனிசார் கட்டுரைகளை சேகரிக்கும் பதிவாகவே இது ஆரம்பத்தில் இருக்கும். காலப்போக்கில் தமிழ் வலைப்பதிவில் கணனி சார் கட்டுரைகள் இடப்படாமல் இங்கு மட்டுமே இடப்படும்.

இங்கு கணனி சார் மிக நுட்பமான பதிவுகள் அவ்வளவாக இடம்பெறாது. இங்கு கணனியியலின் அடிப்படை சம்பந்தமான கட்டுரைகளும் எனது அனுபவங்களும் கட்டுரைகளாக வடிவம் பெறக் காத்து இருக்கின்றன.

முதலில் எனது முன்னய வலைப்பதிவல் எழுதிய கணனிசார் கட்டுரைகளை இங்கு இடம் மாற்றுவதாக உள்ளேன். அதன் பின்பு புதிய கட்டுரைகள் எழுதுவதாகவும் உள்ளேன்.

என்றும் அன்புடன்
ஜெ.மயூரேசன்

5 comments:

RamaniKandiah said...

நல்ல, பயனுள்ள முயற்சி

Jay said...

நன்றி அன்பரே!!! :)

SP.VR. SUBBIAH said...

ஆகா, பயனுள்ள முயற்சி!
நன்றாகச் செய்யுங்கள்!
உங்கள் முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள் மயுரேசன்!

Unknown said...

மிக உபயோகமான தளம். வாழ்த்துக்கள் மயூரேசன். மேலும் பல புதிய தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் வழங்கி மெருகேற்றும்படி கேட்டுக்கொள்கிறேன்.


கவிதா

Jeyapalan said...

நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்.