7 March 2007

10 : குறைந்த விலையில் அகலப்பட்டை இணைப்பு

இந்தத் தகவல் இலங்கை அன்பர்களுக்காக. இந்திய அன்பர்கள் தவறி வந்திருந்தால் சும்மா வந்ததற்காகத் தகவலை வாசித்துவிட்டாவது செல்லுங்களேன்.

தற்போது அகலப்பட்டை இணைப்பு 1000 ரூபா என்ற குறைந்தவிலையில் இருந்து வழங்கப்படுகின்றது. ஸ்ரீ லங்கா டெலிக்கொம் இந்த சேவையை அளிக்கின்றது. முன்பு ஆகக்குறைந்த விலை 2500 ரூபாவாக இருந்தது. 2500 ரூபாவுடன் வாட் வரி சேர்ப்பதன் மூலம் சுமார் 2800 ரூபா வரை மாதா மாதம் செலுத்த வேண்டி இருந்தது. இது சாதாரண நடுத்தரக் குடும்பத்தாருக்குச் கொஞ்சம் அதிகமான பணமே! 2500 ரூபா பணத்திற்கு 512 Kbps வேகமுள்ள இணைப்பை வழங்கினர்.

ஆயினும் தற்போது வழங்கப்படுகின்ற 1000 ரூபா பெறுமதியான இணைப்பு மூலம் நடுத்தர வருமானம் உள்ள குடும்பங்களும் அகலப்பட்டை இணைப்பைப் பெறுவது சாத்தியமாகி உள்ளது. அத்துடன் வேகமும் 512 Kbps ஆகவே உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இப்படி நீங்கள் நினைத்தால் அது முட்டாள் தனம். ஏனெனில் இந்த 1000 ரூபா 1 GB வரை பதிவிறக்க, பதிவேற்ற மட்டும்தானாம். அதற்கு மேல் பதிவிறக்கும் ஒவ்வொரு 250 MB க்கும் 250 ரூபாய் கட்ட வேண்டுமாம். எப்படிப்பார்த்தாலும் 2500 ரூபா பெறுமதியான இணைப்பே லாபமானது. ஆயினும் ஒரு தனிநபர் பதிவிறக்கம், பதிவேற்றங்களில் (குறிப்பாக வீடியோ கோப்புகள், திரைப்படங்கள்) அவ்வளவு ஈடுபடாதவர் என்றால் இந்த இணைப்பு பயன்தரலாம்.

இதில் உள்ள மற்றொரு பிரைச்சனை என்னவென்றால் இன்னமும் இலங்கையின் தமிழ் பிரதேசங்களான வடக்கு – கிழக்கு மாகாணங்களுக்கு இந்த அகலப்பட்டை சேவை வழங்கப்பட வில்லை. தனியே கொழும்பு மற்றும் அதை அண்டிய பகுதிகளிலே வழங்கப்பட்டுள்ளது. விரிவாக்கல் செலவு இதற்குக் காரணமாக இருக்கலாம் என்பது என் கருத்து. ஒளியிழைகளைக்கான அதிகமான செலவே இதற்கு முக்கியமான காரணமாக இருக்க வேண்டும். கொழும்பின் புற நகர்ப்பகுதிகளுக்கே அண்மையில்தான் விரிவாக்கினார்கள்.

சுவர் இருந்தால் தானே சித்திரம் !!! கணனியே இல்லாமல் எத்தனையோ குடும்பங்கள் இருக்கும் போது இந்த விலை குறைப்பினால் என்ன லாபம் என்று கேட்பது என் காதல் கேட்கின்றது!!!

6 comments:

சயந்தன் said...

கொழும்பில் 2500 ரூபாவிற்கு நான் இணைய இணைப்பொன்றை பெற்றிருந்தேன். கணணிப் பாவனைக்கு அல்ல. voip தொலைபேசிக்கு. (வீட்டில் கணணி இல்லை) ஆகவே நாங்கள் மாறலாம் தானே..

பகீ said...

எங்களுக்கெல்லாம் எப்ப இந்த வசதிகள் வாறது?? எப்ப நாங்கள் வாங்கிறது?? பாப்பம்...

http://oorodi.blogspot.com

Anonymous said...

enna yarumaie command panavillaie entru than nan panukiren

Jay said...

பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றி...
சயந்தன் நீங்கள் மாறலாம். மாறுவதற்கு 400 ரூபா கொடுக்க வெண்டும்.

ஆமாம் பகீ எப்ப வருமோ தெரியாது...

அனானி நண்பரே எனது பயிற்சி வேலைத்தளத்தில் இணைய இணைப்பு வளங்கப்படாததால் மாலை வீடு வந்தே பின்னூட்டங்களை அனுமதி வழங்குவேன்.

S.Lankeswaran said...

தங்களின் வளைப்பதிவு அருமையாக உள்ளது. தங்களின் வளைப்பதிவின் தொடர்பை எனது வளைப்பதிவில் இட அனுமதி தருவீரா நண்பரே

எனது வலைப்பதிவு
www.itvav.blogspot.com

Chayini said...

VAT உடன் சேர்த்து 2580.. (2250 + VAT)

இங்க இப்பவெல்லாம் வெளிநாட்டிலுள்ள உறவினர்களுடன் கதைக்க தான் பலர் இணைய வசதி பெற்றுக் கொள்கினம்..
வெளிநாடு போக முதல் பிள்ளைகளே இந்த இணைப்பு எடுத்து கொடுத்து அம்மா அப்பாக்கு சொல்லிக் குடுத்திட்டு போகினம்.. அந்த மாதிரியாக ஆக்களுக்கு இந்த 1000 ரூபா Package நல்லது தானே..

இந்த 1000 ரூபா இணைப்பு பரவலாக பலராலும் பெற்றுக் கொள்ளப்பட பாவனையாளர்களின் எண்ணிக்கை கூடிய பின்னும் SLT, international backbone இனை மேம்படுத்தாததால் quality குறைந்துள்ளதாக குற்றஞ் சாட்டப்பட்டு புதிதாக ADSL Connection வழங்கப்படக் கூடாது என TRC குறிப்பிட்டதாக July மாதத்தில் செய்தி வந்து போனது.