21 February 2007

6 : கணனியில் Screen Shot எடுத்தல்

அண்மையில் சுப்பையா அவர்கள் ஸ்கரீன் ஷொட் (Screen Shot) எடுப்பது பற்றி ஒரு கட்டுரை எழுதுமாறு கேட்டிருந்தார். வின்டோசில் ஸ்க்ரீன் ஷொட் எடுப்பது சின்ன வேலையே!

முதலில் உங்களுக்கு ஸ்க்ரீன் ஷொட் எடுக்க வேண்டிய செயலியை திறந்து கொள்ளுங்கள் பின்னர் தட்டச்சுப் பலகையில் வலது பக்கம் பாருங்கள் Print Screen என்றொரு கீ இருக்கும் அதை இப்போது தட்டுங்கள்.

Print Screen கீயைத் தட்டியதும் உங்கள் கணனியின் திரையில் தெரியும் விடையங்கள் இப்போது கிளிப் போட்டில் சேமிக்கப்பட்டிருக்கும்.

உதாரணத்திற்கு இப்போது மைக்ரொசாப்ட் வேர்ட் சென்று Edit -> Paste என்று சொடுக்குங்கள் உடனடியாக உங்கள் கணனித் திரையில் தெரிந்த காட்சிகள் உங்கள் வேர்ட் டொகுமென்டில் வரும். கீழே உள்ள படத்தை பார்க்க.



அடுத்து ஸ்க்ரீன் ஷொட்டை எவ்வாறு படமாகச் சேமிப்பது என்று பார்ப்போம். அதாவது முதலில் சொன்னவாறு Print Screen விசையை அமத்திய பின்னர் பெயின்ட் போன்ற மென்பொருள்குச் சென்று Edit -> Paste என்று சொடுக்குங்கள். இப்போது திரையின் படம் உங்கள் பெயின்டில் ஒரு படமாக அமர்ந்து இருக்கும். பின்னர் வழமைபோல சேமித்துக்கொள்ளலாம். கீழே இருக்கும் படம் அவ்வாறு சேமிக்கப்பட்டதே!


உங்களுக்கு ஏதாவது ஒரு பகுதியை வெட்டியெடுக்க வேண்டும் என்றால் பெயின்டில் அதற்காக உள்ள வசதி மூலம் வெட்டி எடுத்துக் கொள்ளலாம்.

சந்தேகம் வந்தால் கேளுங்கள்.

அன்புடன்,
மயூரேசன்.

5 comments:

SP.VR. SUBBIAH said...

நன்றி நண்பரே!

உங்கள் பதிவில் என்னுடைய பின்னூட்டத்தைப் படித்துவிட்டு மற்றுமொரு பதிவுலக நண்பர் வடுவூர் குமார அவரகளும் விவரத்தை மின்னஞ்சல் மூலம் தெரிவித்திருந்தார்.

இருவருக்கும் எனது நன்றி!!!!

நீங்கள் இப்போது தனிப் பதிவாக இட்டிருப்பது, புதியவர்களுக்கு உதவும்!

அன்புடன்,
SP.VR. சுப்பையா

நாடோடி said...

alt+printscreen தற்போது எந்த நிரலியில் இருக்கோமோ அதை மட்டுமே தனியாக கிளிப்பில் சேகரிக்கும். அதை தவிர்த்து மற்றவைகளை சேகரிக்காது.

புதுப்பாலம் said...

எளிதாக கணிணி திரையை படமாக்க
PrintScreen எனப்படும் "திரையைப் படமாக்கல்" அதாவது கணிணி மானிடர் திரையிலுள்ளதை அப்படியே படமாக்கி சேமிக்க அல்லது ஒரு குறிப்பிட்ட விண்டோவை மட்டும் படமாக்கி சேமிக்க இதோ ஒரு இலவச எளிய அருமையான மென்பொருள் உங்களுக்காக.இதை இறக்கம் செய்து உங்கள் கணிணியில் நிறுவ வேண்டும்.பிடிக்கப்பட்ட Screen Shot-டை நேரடியாக சேமிக்கலாம் இல்லை பிரிண்டருக்கு அனுப்பலாம் இல்லை நேரடியாக மின்னஞ்சலே செய்யலாம். http://www.gadwin.com/download/ps_setup.exe அப்டேட்: நண்பர் கார்த்திகேயன் பரிந்துரைக்கும் இன்னொரு இதே பயன்பாட்டு மென்பொருள்.Looks like excellent.Give a try. http://www.mirekw.com/winfreeware/mwsnap.html

குறிப்பு: மேலேயுள்ள தகவல் pkp.blogspot.com-ல் காணக்கிடத்தவை.

அன்புடன்
இஸ்மாயில் கனி

Jay said...

நன்றி திரு.சுப்பையா அவர்களே

மேலதிக தகவல் பின்னூட்டம் இட்ட நாடோடி, PUDUPPAALAM ஆகிய இருவருக்கும் நன்றிகள்.

மாசிலா said...

ஏறக்குறை 10-15 வருடமா கணினியில் இருக்கும் எனக்கு இப்போதுதான் இந்த நுட்பம் தெரியும்.
மிக்க நன்றி மயூரேசன்.

கேள்வி கேட்ட சுப்பையாவிற்கும் நன்றி.